Saturday, November 10, 2007

இன்னைக்கு ஆட்டம் கான்பூரில்...

அமாம், இன்னைக்கு ஆட்டம் கான்பூரில். நெட்டில் எதற்கு முன்னால் கான்பூரில் ஆடிய ஆட்டங்களை பற்றி ஆராய்ச்சி செய்த பொது கிடைத்த சில தகவல்கள்:
கான்பூரில் முதன்முதலாக ஆடிய ஆட்டம் ஒரு டெஸ்ட் போட்டி. 1952 - பொங்கல் பண்டிகையின்போது - ஜனவரி 12 டு 14. மூன்றே நாட்கள்தான். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஆட்டம். முதலில் ஆடிய இந்தியா, அடித்தது 121 மட்டுமே.
ராய் மற்றும் மங்கட் அப்பறம் நாயுடு, இவங்க மட்டும் இரட்டை இலக்க ரன்கள். மத்ததெல்லாம் சும்மா வந்தோம், வெள்ளக்காரங்களை பார்த்தோம் என்ற சந்தோஷத்தில் திரும்பி போனார்கள்.பிறகு வந்த இங்கிலாந்து வீரர்கள் மட்டும் ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை. 203 ரன்கள் மட்டும் அடித்துவிட்டு, இப்போதைக்கு இது போதும் என்ற மகிழ்ந்த மனதுடன் நம்மவர்களை மீண்டும் ஆடவிட, முதல் இந்நிங்க்சை விட கொஞ்சம் அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணி ஆடி, 157 ரன்கள் குவித்தார்கள்.
உங்கள் கணக்கு வாத்தியார் உங்களுக்கு நன்றாக பாடம் நடத்தியிருந்தால், உங்களுக்கு ஒரு சமாசாரம் புரிந்திருக்கும். இங்கிலாந்து 76 ரன்கள் எடுத்தால் போதும் ஆட்டத்தில் ஜெயிக்க என்று.
வெள்ளைக்காரர்கள் அந்த வேலையை செய்து முடிக்க, அம்பயர்கள், சரி எல்லோரும் வீட்டுக்கு போகலாம், என்றதால், ஆட்டம் அதோடு முடிந்து போனது.
சரி, கான்பூரில் ஆடிய முதல் ஒரு நாள் சர்வதேச ஆட்டம், நீங்கள் இது வரை படித்ததை விட இன்னும் பெரிய தமாஷ். இது நடந்தது 1986 christmas-க்கு ஒரு நாள் முன்னால்.
அதாவது இந்தியாவை எதிர்த்து ஆடிய டீம் ஸ்ரீலங்கவாகும். முதலில் ஆடிய அவர்கள் அடித்து என்னவோ வெறும் 195 தான். ஆனால் விதி நேரம் தெரியாத நேரத்தில் விளையாடிய ஒரே காரணத்தால் நம்மவர்கள் 78 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. நம்மாள் ஸ்ரீகாந்த் அடித்தது 17 ரன்கள் அதுதான் பெரிய ஸ்கோர்.
சரி, கடைசியாக கான்பூரில் நடந்த போட்டி எப்படி? அதுதான் ரொம்ப interestingana விஷயம். இதே பாகிஸ்தானுடன். இந்திய முதலில் விளையாடி 249 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் சுறுசுறுப்பாக விளையாடி 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றார்கள்.
இப்படி ஒரே சோகமயமான கான்புரில்தான் இன்னைக்கு ஆட்டம்.பாக்கலாம் நாளைக்கு மறுபடியும். சரியா?

தீவுகள்

இது ஒரு புதிய பதிவு. எப்படி இருக்கு பாக்கணும் அதான்... நல்லா இருக்கு இல்ல?